Saturday, January 1, 2011

பொங்கல் வைப்பது எப்படி?

பொங்கல் அன்று கிழக்காக கதிரவனை பார்த்தவாறு வாசலில் பொங்கலிடுவதே சிறந்தது. இதற்காக, செங்கல்களில் மண் அடுப்பு அல்லது இரும்பு அடுப்பு வைத்து, அதன் மீது மண்பானை அல்லது புதிய வெண்கல பாத்திரம் வைத்து பொங்கலிட வேண்டும்.
மங்கலம் தரும் மஞ்சள் : பொங்கலிடும் இடத்தில் தரையில் கோலம் இட்டிருக்க வேண்டும். கோலத்திற்கு வடக்கு பக்கம் சூரியனையும், தெற்கு பக்கம் சந்திரனையும் வரைந்திருக்க வேண்டும். அதற்கு மேல், பூசணிப்பூவை பசுஞ்சாணத்தில் அருகம்புல்லுடன் வைத்து பூஜை செய்வார்கள். சூரியனுக்கு பூசணி, அருகம்புல் உகந்தவை என்பதால் அப்படிச் செய்கிறார்கள்.
பொங்கல் பானையின் விளிம்பில் மங்கலம் பொங்குவதற்காக இலையுடன் கூடிய மஞ்சள் கொத்தினை கட்டி வைக்க வேண்டும். மஞ்சளின் திருமகளான மகாலட்சுமி வாசம் செய்கிறாள்.
மேலும், தோகையுடன் கூடிய கரும்பு, வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய் போன்றவற்றையும் அங்கே ஓரிடத்தில் வைக்க வேண்டும்.
நகர்புறங்களில் போதிய இடவசதியின்மை போன்ற சூழ்நிலைக் காரணமாக கேஸ் அடுப்பிலேயே பொங்கல் வைக்கின்றனர். அவ்வாறு செய்து வழிபடுவதால் முழுமையான பயன்களை பெற முடியாது.
நிலம், நீர், நெருப்பு, ஆகாயம், காற்று ஆகிய பஞ்ச பூதங்களில் ஆதவனுக்கும், அக்னிக்கும் முக்கியத்தவம் கொடுக்கும் விதத்தில் வீட்டு வாசலில் பொங்கலிடுவது தான் சிறப்பானது. நகர்புறங்களில் வாடகை வீடுகளில் வசிப்பவர்களால், அவர்களது இஷ்டப்படி பொங்கலை கொண்டாட முடியாது. அப்படிப் பட்டவர்கள், புதியதாக வாங்கிய செங்கல் அடுப்பு அல்லது மண் அடுப்பில் பொங்கல் இடலாம்.
வீட்டு அறைக்குள் பொங்கலிட்டாலும், கிழக்கு நோக்கி வைத்து, ஜன்னல் வழியாக கதிரவனைப் பார்த்து வணங்குவதன் மூலம் கனிவான வாழ்க்கையை பெறலாம்.
பொங்கல் பொங்கி வரும்போது ‘பொங்கலோ பொங்கல்’ என்று முழங்க வேண்டும். பெண்கள் குலவை இடுவதும் சிறப்பானதுதான். பானையில் இருந்து பொங்கல் பொங்கி முதலில் வடியும் திசை கிழக்காக இருந்தால் அந்த ஆண்டு முழுவதும் எல்லாம் நல்லதாகவே நடக்கும். வாழ்க்கை வசந்தமாகும் என்பது நம்பிக்கை.
சில இடங்களில் பொங்கல் வைக்கும்போது வெண் பொங்கலும், சர்க்கரை பொங்கலும் சேர்ததே வைப்பார்கள். சர்க்கரை பொங்கலை அன்றைய தினம் கதிரவனுக்கு படைத்து முடித்ததும் அடுத்தவர்களுக்கு வழங்கி, தாங்களும் உண்டு மகிழ்வார்கள். வெண் பொங்கலை தண்ணீர் ஊற்றி வைத்துவிட்டு மறுநாள் காலையில் பல காய்கறிகளை கொண்டு செய்த சாம்பார் வைத்து அதை உண்பார்க
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "பொங்கல் வைப்பது எப்படி?"

Post a Comment