தேவையானவை : அரிசி - முக்கால் கிலோ, பயத்தம் பருப்பு - கால் கிலோ, பால் - 8 லிட்டர், வெல்லம் - 6 கிலோ, ஏலக்காய் - 5 கிராம், முந்திரி, திராட்சை - சிறிதளவு, நெய் - 150 கிராம்.
செய்முறை : சிறிது நெய்யில், அரிசி, பயத்தம் பருப்பை லேசாக வறுத்து குக்கரில் நன்றாகக் குழைய வேகவிடவும். பிறகு அதில் பால் விட்டு கொதித்ததும் கெட்டியாக வரும்போது தீயைக் குறைத்து வெல்லத்தைப் பொடித்துப் போட்டு கொதிக்கவிட்டு நன்றாகக் கிளறி இறக்கவும். நெய்யில் முந்திரியை வறுத்துப் போட்டு ஏலக்காய் சேர்க்கவும்.

0 comments: on "அக்காரவடிசல்"
Post a Comment