தேவையானவை : பச்சரிசி - ஒரு கிலோ, பாசிப் பருப்பு - 200 கிராம். வெல்லம் - இரண்டரை கிலோ, நெய் - 250 கிராம், முந்திரி - 200 கிராம், ஏலம் - 20 எண்ணிக்கை, பச்சைக் கற்பூரம் - தேவையான அளவு
செய்முறை : பச்சரிசி, பாசிப் பருப்பு இரண்டையும் களைந்து கொதிக்கும் தண்ணீரில் போடவும். நன்றாகக் கொதித்து வந்ததும் பதமாகக் கிண்டி, குழைய மசித்து இறக்கவும். வெல்லத்தில் 2 லிட்டர் தண்ணீர் சேர்த்துக் கொதிக்க வைக்கவும். கம்பிப் பாகு பதம் வந்ததும் டீ வடிகட்டியால் வடிகட்டவும். இதில் வெந்த சாதத்தைக் கொட்டிக் கிளறவும். நெய்யில் முந்திரிப் பருப்பை வறுத்துப் போடவும். ஏலக்காய், பச்சைக்கற்பூரம் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.
அக்காரவடிசல்

0 comments: on "பொங்கல்- சிறப்பு சமையல் குறிப்பு"
Post a Comment