Wednesday, January 5, 2011

'ரெடி' இந்திப் படத்தில் சல்மான்கான்-அசின் ஜோடி

'ரெடி' இந்திப் படத்தில் சல்மான்கான்-அசின் ஜோடியாக நடிக்கின்றனர். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இருவருக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் வந்துள்ளன. டி.வி. பேட்டியொன்றில் இருவரும் திருமணம் செய்து கொண்டு விட்டதாக செய்திகள் வந்துள்ளதே என்று கேட்கப்பட்டது. அதற்கு சல்மான்கான் பதில் அளிக்கையில் அப்படி நடந்து இருந்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன் என்றார். 
அசின் குறுக்கிட்டு சல்மான்கான் ஜோக்கடிக்கிறார் என்று சொல்லி நழுவினார். இதற்கிடையில் 'ரெடி' படப்பிடிப்பில் சல்மான்கான் தாய் போல் தன்னை கவனித்துக் கொண்டதாக அசின் கூறினார். இது குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- 'ரெடி' படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக இடைவெளியில்லாமல் நடக்கிறது. தினமும் காலை 6 மணிக்கே மேக்கப்போட்டு தயார் ஆகிறேன். இடையில் அரை மணி நேரம் மதிய சாப்பாடு, பிறகு மாலை 6 மணிவரை படப்பிடிப்பு. 
ஓய்வில்லாமல் நடித்ததால் எனக்கு காய்ச்சல் வந்து விட்டது. க்ளைமாக்சை 25 முக்கிய நடிகர்களை வைத்து எடுக்க ஏற்பாடு செய்து இருந்தனர். படப்பிடிப்பை நிறுத்தினால் மீண்டும் அவர்களை ஒன்று சேர்ப்பது கஷ்டம் என்றார் தயாரிப்பாளர். வேறு வழியின்றி காய்ச்சலோடு நடித்தேன். 
அப்போது மணிக்கு ஒரு தடவை சல்மான்கான் டாக்டர்கள் சொன்னபடி மருந்து மாத்திரை கொடுத்தார். பழரசங்களும் கொடுத்தார். பக்கத்தில் அப்பா, அம்மா இல்லாத குறையை தீர்த்து வைத்தார். அவர் ரொம்ப நல்ல மனிதர். சல்மான்கானால் சீக்கிரம் குணமானேன் என்றார். சரி! சரி! ரொம்ப உருகாதீங்க..அப்பறம் திரும்பவும் காய்ச்சல் வந்துரும்....


Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "'ரெடி' இந்திப் படத்தில் சல்மான்கான்-அசின் ஜோடி"

Post a Comment