மன்மதன் அம்பு படத்தில் நடித்தது குறித்து பெருமிதமாக சொல்லி வந்த ஓவியா இப்போது அந்தப் படத்தில் தனது ரோல் மிகச் சிறிதாக காட்டப்பட்டதால் வருத்தமடைந்துள்ளாராம்.
மன்மதன் அம்பு படத்தில் கமல் சாருடன் நடித்திருக்கிறேனாக்கும், என்று அத்தனை பேரிடமும் அலுக்காமல் சொல்லி வந்தார் ஓவியா.
ஆனால் படம் வெளியான பிறகுதான் தெரிந்தது, அவருக்கு மிகச் சிரிய ரோல் என்பது. களவாணி படம் மூலம் சூப்பர் ஹிட் நாயகியாக உச்சத்திற்குப் போயிருந்த அவருக்கு மாதவனுக்கு மசால் வடை தரும் வேலைக்காரப் பெண் ரேஞ்சுக்கு கொடுக்கப்பட்ட ரோல் பெரும் சோகத்தைத் தந்து விட்டதாம்.
இப்போது முன்பு பெருமை பேசிய நபர்களிடம் மூக்கைச் சிந்துகிறார் அம்மணி.
“கமல் படமாச்சே… நாலு சீன்ல வந்தாலும் பெருமை என்றுதான் ஒப்புக் கொண்டேன். ஆனால் படத்தில் இரண்டு காட்சிகளில் வருகிறேன். அதுவும் வேலைக்காரி மாதிரி வேடத்தில். இது மிகவும் வருத்தம் அளித்தது. அட்லீஸ்ட் கமல்ஹாஸனுடன் ஒரு காட்சியில் வந்திருந்தாலாவது கொஞ்சம் கவுரவமாக இருந்திருக்கும். மன்மதன் அம்பு மனசை நோகடித்ததுதான் கடைசியில் மிச்சம்!”, என்கிறார் சலிப்புடன்.
இனி பிரபல படமாக இருந்தாலும் கேரக்டர் தெரியாமல் ஒப்புக் கொள்ளக்கூடாது, என்ற முடிவுக்கு வந்துள்ளாராம் ஓவியா. இப்படித்தான் முன்பு பிரியாமணி ராவணன் படத்தில் நடித்து பிறகு ஏமாந்தார். இப்போது ஓவியாவுக்கு ஏமாற்றம் கிடைத்துள்ளது.

0 comments: on "மன்மதன் அம்பு மனசை நோகடித்ததுதான் கடைசியில் மிச்சம்!”"
Post a Comment