Wednesday, January 5, 2011

அஜீத், சிம்பு, திரிஷா, ஸ்ரேயா, தமன்னா நடிகர், நடிகைகளின் புத்தாண்டு விருந்துகள்

நடிகர், நடிகைகள் நட்சத்திர ஓட்டல்களிலும், பண்ணை வீடுகளிலும் புத்தாண்டு பண்டிகையை தடபுடலாக கொண்டாடிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இயக்குனர் பிரியதர்ஷன் மனைவி லிசியுடன் கடற்கரை ஓரம் உள்ள புது வீட்டில் விருந்துக்கு ஏற்பாடு செய்தார். முன்னணி நட்சத்திரங்கள் இதில் பங்கேற்றனர்.
ரம்யாகிருஷ்ணன், நெருங்கிய தோழிகள் மற்றும் நடிகர், நடிகைகளுக்கு கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பங்களாவில் புத்தாண்டு விருந்து கொடுத்தார். இந்த விருந்து விடிய விடிய நடந்ததாம். திரிஷா, ஜெகபதிபாபு, அர்ஜூன், சோனியா அகர்வால் ஆகியோர் பங்கேற்றனர்.

மணிரத்னமும் சுகாசினியும் நட்சத்திர ஓட்டலில் பெரிய விருந்து அளித்தனர். இதில் மலையாள நடிகர் மோகன்லால் பங்கேற்றார். வால்மீகி நகரில் உள்ள அஜீத் வீட்டில் நடந்த விருந்தில் இயக்குனர் வெங்கட் பிரபுவும் “மங்காத்தா” படக்குழுவினரும் பங்கேற்றனர்.

ஸ்ரேயாவும் ரீமாசென்னும் கோவாவில் புத்தாண்டை கொண்டாடினர். விஜய் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொட்டிவாக்கத்தில் உள்ள பங்களா வீட்டில் புத்தாண்டை கொண்டாடினார். ஆர்யாவும் விஷாலும் தேனியில் படப்பிடிப்புக்காக தங்கி இருந்த ஓட்டலில் கொண்டாடினர்.

பிரகாஷ்ராஜ் மனைவி போனிவர்மாவுடன் மகாபலிபுரத்தில் உள்ள பண்ணை வீட்டுக்கு வந்து புத்தாண்டை கொண்டாடினார். அங்கு நடந்த விருந்துக்கு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களை அழைத்து இருந்தனர்.

மும்பையில் தமன்னாவும் ஹன்சிகாவும் ஓட்டலில் நெருங்கியவர்களுக்கு விருந்து வைத்து கொண்டாடினர்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "அஜீத், சிம்பு, திரிஷா, ஸ்ரேயா, தமன்னா நடிகர், நடிகைகளின் புத்தாண்டு விருந்துகள்"

Post a Comment