வெப்பம் படத்தை டைரக்டர் கெளதம் வாசுதேவ் மேனன் தயாரித்துள்ளார்.
இப்படத்திற்காக இசைத்தொகுப்பினை இயக்கி,ட்ரைலர்-ஆடியோ வெளியீட்டின் போது திரையிட்டுள்ளார்.
வெப்பம் படத்தின் அறிமுக இயக்குனர் அஞ்சனா,கேமராமேன் ஓம் பிரகாஷ்,இசையமைப்பாளர் ஜோஸ்வா ஸ்ரீதர்,பாடலாசிரியர் நா.முத்துகுமார்,மற்றும் பாடகர்-பாடகிகள் பங்கேற்க கச்சேரியை ரசிக்கும்படி கொண்டுசென்றார் கெளதம்.
படத்தில் முக்கியமான கேரக்டர்களில் நடித்த நாணி, கார்த்திக் குமார்,பிந்து மாதவி ஆகியோரும் அதில் கலந்துகொண்டனர். பாலிவுட்டிலிருந்து தமிழுக்கு நடிக்க வந்தவரைபோல இருந்தார் வெப்பம் படத்தின் அறிமுக இயக்குனர் அஞ்சனா. கொஞ்சம்,கொஞ்சம் தமிழும் பேசினார் ஆங்கிலம் கலந்து.
வெப்பம் படத்தின் கதை என்ன?…டைரக்டர் அஞ்சனாவின் பதில்கள்:’சிறு வயதில் தாயை இழந்து, தந்தையால் வெறுக்கப்படுகிறார்கள் பாலாஜியும் அவன் தம்பி கார்த்திக்கும்.
பெயண்டர் சேகர் அரவணைப்பில் தம்பியை சிரமத்துடன் படிக்க வைக்கிறான் பாலாஜி. தன் தம்பி சந்தோசமாக இருக்க வேண்டும் என்பதே அவன் லட்சியம். சேகரின் மகள் ரேவதிக்கும் கார்த்திக்கும் காதல்.
கார்த்திக்கின் நண்பன் விஸ்ணு குறுக்கு வழியில் பணம் பார்ப்பவன்.இதனால் இருவரும் பிரச்சினைகளில் சிக்கி தவிக்கிறார்கள். வில்லன்களின் வலையில் மாட்டிக்கொண்ட தம்பி கார்த்திக்கை மீட்க பாலாஜி புறப்படுகிறான்.
அதற்கு பிறகு என்ன நடக்கிறது? என்பதை பரபரப்பாக சொல்லியிருக்கிறோம் படப்பிடிப்பு அனுபவம் எப்படி இருந்தது? ‘சென்னையிலும்,அதை சுற்றி உள்ள இடங்களிலும் படக்காட்சிகள் செட் போடாமல்,’லைவ் லோகேசனில்’ படமாக்கினோம். படத்தில் பல காட்சிகள் ‘கேண்டிட் ஷாட்ஸ் களாக’ எடுக்கப்பட்டன. பொதுமக்கள் அறியாமல்,படப்பிடிப்பில் நடிகர்களுடன் கலந்து பேசியது படமாக்கப்பட்டது.பல காட்சிகள் ‘அவைலபிள் லைட்’டில் எடுக்கப்பட்டது. படத்தின் திரைக்கதை ஒரு நேர்க்கோட்டு கதையல்ல.கதை செல்லும் போக்கில் பயணிக்க கவனம் தேவை என்றார்