கவுதம் மேனனின் கிராப்புதான் பழசு. ஆனால் போடும் கிராஃப்கள் புத்தம் புதுசு என்பதை சொல்லாமல் சொல்லியது அவரது தயாரிப்பில் வெளிவரப்போகும் ‘வெப்பம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா. எல்லா பாடல்களும் எப்படி கம்போஸ் செய்யப்பட்டன என்பதை படமாக்கி அதை திரையில் ஓடவிட்டார். (சுமார் 30 நிமிடங்கள், ஒரு முழு படம் பார்த்த திருப்தி!) இவங்களே பாடல்களை ரிலீஸ் பண்ணுவாங்க என்று கவுதம் சொல்ல, அதே ஸ்கிரீனில் பாடல்களை வெளியிட்டார்கள் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதரும் பாடகர்களும். ஆனால் மேடைக்கென்று சில சம்பிரதாயங்கள் இருக்கிறதே? ட்ரெய்லரை வெளியிட வந்தார் நடிகை சுஹாசினி மணிரத்னம்.
என் 19 வயசு பையன் கூட நேற்று சினிமாவை பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அவன் நிறைய விஷயங்களை அனலைஸ் பண்ணி பேசுவான். தமிழ்சினிமாவின் டேர்ன் ஓவர் ஆயிரம் கோடியை தாண்டும்னு அவன் ஒரு புள்ளிவிபரம் சொன்னான். திண்டுக்கல் பகுதியில் நடக்கும் கிரானைட் பிசினஸ் இதைவிட நாலு மடங்குதான் அதிகம் என்பது அவன் சொன்ன புள்ளிவிபரம் இன்று பண வசதியுள்ள நிறைய பேர் பேமஸ் ஆகணும்னு சினிமாவுக்கு வர்றாங்க. ஆனால் கவுதம் மேனன் போன்ற ஒரு சிலர்தான் இந்த சினிமாவை நேசிச்சு வர்றாங்க. பணம் இருந்தா மட்டும் புகழ் கிடைச்சிடாது. அதை வச்சு நல்ல படங்களை கொடுக்கலைன்னா அதுவே ‘இன் பேமஸ்’ ஆயிடும் என்றார் சுஹாசினி.
இன்று சினிமா தென் தமிழகத்தைதான் மையம் கொண்டிருக்கு. ஆனால் சென்னையையும் இங்குள்ள வாழ்க்கையையும் அழகா பிரதிபலிக்கிறது கவுதம் மேனனும் என் கணவர் மணிரத்னமும்தான் என்று கூடுதலாகவும் ஒரு விஷயத்தை சொல்லி அமர்ந்தார் சுஹாசினி.
கல்லு£ரி படம்தான் நான் கடைசியா இசையமைச்ச படம். நல்ல டைரக்டர்களின் படங்கள் வந்தால் பண்ணுவோம். இல்லைன்னா சும்மாவே இருப்போம். பணத்துக்கு ஆசைப்பட்டு படம் பண்ண வேண்டாம் என்று நாலு வருஷம் ஒதுங்கியே இருந்தேன் என்றார் இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர். இந்த ஓய்வு ஒரு புயல்வேக ஓட்டத்திற்கான ‘வார்ம் அப்’ என்பது மட்டும் தெள்ளந் தெளிவாக புரிந்தது நமக்கு. ஏனென்றால் இந்த பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் அப்படி ஒரு ருசி!
0 comments: on "கவுதம் மேனனின் ‘வெப்பம்’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா"
Post a Comment