ஒவ்வொரு ஆண்டும் புதுவருடம் பிறக்கும்போது பெரும்பாலானவர்கள் சபதமேற்று அந்த லட்சியத்தை நோக்கி அந்த வருடம் முழுவதும் பயணிப்பார்கள்.
அந்த லட்சியம் நிறைவேறுகிறதோ இல்லையோ… நாட்கள் மட்டும் கடந்து கொண்டே போகும். தமிழ் சினிமாவின் நட்சத்திரங்கள் சிலரது புத்தாண்டு லட்சியங்கள் என்னென்ன என்பது பற்றிய ஸ்பெஷல் ரிப்போர்ட் இது:-
தமன்னா (நடிகை) : எனக்கு புதுவருஷம், புது திட்டத்தில் எல்லாம் நம்பிக்கை இல்லை. நமக்கு வாழ்க்கையில் எது கிடைக்கணும்னு இருக்கோ அது கண்டிப்பா கிடைக்கும். எல்லோருக்கும் என் வாழ்த்துக்கள்.
சற்குணம் (டைரக்டர்) : ஒவ்வொரு வருஷமும் ஜனவரி 1ம்தேதி வரும்போதெல்லாம் இந்த வருஷம் படம் பண்ணுவோமான்னு பயம் வரும். ஆனால் இந்த வருஷம் அந்த பயம் இல்லை. களவாணி படம் எடுத்து ஓரளவு மக்கள்கிட்ட சேர்த்துட்டேன்னு நினைக்கிறேன். புது வருஷத்துக்குன்னு சபதம் எதுவும் எடுக்கிற பழக்கம் எப்போதும் எனக்கு இல்லை. நல்லா வேலை பார்க்கணும்; ஜெயிக்கணும்ங்கிற வெறி மட்டும் மனசுக்குள்ள இருக்கு.
பிரசாந்த் (நடிகர்) : புதுவருஷ திட்டம் என்றெல்லாம் எதுவும் கிடையாது. நல்ல விஷயம் எது மனசுல பட்டாலும் அன்னைக்கே முடிவு எடுக்கணும். இதுக்குன்னு தனியா ஒரு நாள் தேட வேண்டியதில்லை. இந்த வருஷம் எனுக்கு ஒரு வெற்றிகரமான வருஷமா அமையும்னு நம்புறேன். மக்கள் எல்லோரும் அன்போடும்; சந்தோஷத்தோடும் இருக்கணும்னு வேண்டிக்கிறேன்.
சுசீந்திரன் (டைரக்டர்) : வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல படங்கள் ஓரளவு வெற்றி பெற்றது. அடுத்தடுத்து படங்கள் இயக்கிக்கிட்டு இருக்கேன். இந்த வருஷம் என்னுடைய சபதம் என்னன்னா… எத்தனை வெற்றி என்னை தூக்கிக் கொண்டு உயரத்தில் வைத்தாலும் என்றும் மாறாமல் நான் நானாகவே இருக்கணும்ங்கிறதுதான்.
அமலா பால் (நடிகை) : திடீர்னு நடிகை ஆயிட்டேன். மைனா எனக்கு மிகப்பெரிய இடம் தந்திருக்கு. இனிமே எனக்கு இதுதான் தொழில்னு முடிவு பண்ணிட்டேன். அதனால உடற்பயிற்சி, ஸ்டைல், நடிப்புன்னு எல்லாத்திலயும் சீரயஸா எடுத்துட்டு கவனம் செலுத்தலாம்னு திட்டமிட்டிருக்கேன். அதுதான் இந்த புத்தாண்டு சபதம்.
அதர்வா (நடிகர்) : திட்டங்கள் எல்லாம் வெளியே சொன்னால் பலிக்காதுன்னு சொல்வாங்க. சில விஷயங்கள் மட்டும் சொல்றேன். நான் இன்ஜினீயரிங் 4வது ஆண்டு படிக்கிறேன். ஒரு பக்கம் படிப்பு; இன்னொரு பக்கம் நடிப்புன்னு ரெண்டுலயும் கவனம் செலுத்த முடிவு பண்ணிருக்கேன். 2011ல் எனக்கு 3 படம் ரீலிஸ் ஆகும். அதுக்காக தீவிரமா வேலை பார்க்கிறேன்.
அனன்யா (நடிகை) : இந்த புத்தாண்டு திட்டங்களிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்ல. 2010 வரைக்கும் நான் எந்த திட்டங்களும் போட்டதில்லை. எதுவும் நடக்காம கூட போயிடும். இப்போதைக்கு நான் நினைக்கிறது 2011 நல்லா இருக்கணும். நல்ல படங்கள் அமையணும்ங்கிறதுதான்.
பாவனா (நடிகை) : புது வருஷத்துக்காக நாம செய்யும் நல்ல விஷயத்துக்கு காத்திக்கிடக்கணும்னு இல்ல. நமக்கு எப்ப நல்லதுன்னு தோணுதோ அப்பவே செய்திடணும். இதுதான் என் பாலிஸி. நமக்கு வர்றத ஏத்துக்கணும். இப்போதைக்கு நான் நினைக்கிறது என்னன்னா… நல்ல பேரை வாங்கித் தரணும்; நல்ல படங்களா அமையணும். அவ்ளோதான்.
முமைத்கான் (நடிகை) : தெலுங்கு, கன்னடத்தில் நிறைய படங்கள் பண்றேன். தமிழ்லயும் கொஞ்சம் நல்ல நல்ல படங்களா நடிக்கணும்னு ஆசை. ஐதராபாத்தில் இந்த வருஷம் பொழுது போக்கும் மையம் தொடங்கப்போறேன். நிறைய ஷோ, டான்ஸ் புரோகிராம் எல்லா நாடுகள்லயும் பண்ணனும்ங்கிறது 2011ம் வருஷத்தோட லட்சியம்.
ஜீவா (நடிகர்) : நான் இந்த வருஷம் எந்த திட்டமும், சபதமும் எடுக்கிறதா இல்லன்னு முடிவு பண்ணிருக்கேன். வேலையை சிறப்பா செய்தா எல்லாம் நல்லபடி அமையும்னு நம்புறேன்.
பத்மப்ரியா (நடிகை) : இந்த புதுவருஷ சபதத்தில் எல்லாம் எனக்கு நம்பிக்கை கிடையாது. நாம முடிவு செய்யும் எந்த காரியத்தையும் செய்வதற்கு ஒரு நாள் தேவையில்லைங்கிறதுதான் என்னோட கருத்து.
திவ்யா ஸ்பந்தனா (நடிகை) : தொடர்ந்து படங்கள்ல நடிச்சிட்டு இருந்தாலும், உலகம் முழுக்க சுற்றிப்பார்க்கணும்னு ஆசை. இந்த வருஷத்திய என்னோட திட்டமும் இதுதான். பார்க்கலாம். என்னோட திட்டம் எந்த அளவுக்கு சக்சஸா நடக்குதுன்னு.
நதியா (நடிகை) : ஒவ்வொரு நாளும் புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். எப்போதும் துணையாக நிற்கும் குடும்பத்துக்கும், பாராட்டி உற்சாகப்படுத்தி வரும் சுற்றத்தாருக்கும், ரசிகர்களுக்கும் என்றைக்கும் நன்றியோடு இருக்கணும்னு ஆசைப்படுறேன்.
ஸ்னிக்தா (நடிகை) : இந்த வருஷம் வீட்டில் இருப்பவர்களோடு அதிக நேரம் செலவழிக்க விரும்புறேன். இந்தி படங்கள்ல நடிச்சிட்டு இருக்கேன். நிறை நல்ல நல்ல தமிழ்ப்படங்கள் அமையணும்னு ஆசைப்படுறேன்.
வினய் (நடிகர்) : இந்த புது வருஷத்துக்குள்ள சிகரெட் பிடிக்கிறத நிறுத்தணும். நிறைய நல்ல படங்கள் நடிக்கணும். பெங்களூருவில் இருந்து சென்னைக்கு குடியேறணும்னு நிறைய சபதம், லட்சியம் இருக்கு. எது எது நிறைவேறுதுன்னு பார்க்கலாம்.
ஸ்ரீகாந்த் (நடிகர்) : மக்கள் மனசுல இடம் பிடிக்கிற மாதிரி கேரக்டர்கள்ல நடிக்கணும். வெற்றிபெறும் படங்களில் நான் இருக்கணும்னு ஆசைப்படுறேன்.
நகுல் (நடிகர்) : கடினமா உழைக்கணும். நல்ல நல்ல படங்களா தேர்ந்தெடுத்து நடிக்கணும். என்னால் முடிந்தவரை இயலாதவர்களுக்கு உதவி செய்ய விரும்புறேன்.
சாந்தனு (நடிகர்) : கெட்ட பழக்கம் எல்லாத்தையும் விட்டுட்டு, நிறைய கடினமா உழைக்கணும். தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடிக்கணும்.
கிரீடம் விஜய் (டைரக்டர்) : டயட் விஷயத்தில் கவனம் செலுத்தணும். சரியான நேரத்திற்கு சாப்பிடணும். இந்த வருஷம் ஒரு இந்தி படம் இயக்கியே ஆகணும். இதுதான் என்னுடைய நீண்ட நாள் கனவு.
ராதாமோகன் (டைரக்டர்) : புதிய திட்டங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. நல்லபடியாக வேலை செய்யணும். சினிமாதான் எல்லாமேன்னு நினைச்சி கடினமா உழைக்கணும். நல்ல படங்களை கொடுக்கணும்.
வானம் டீம்
சிம்பு (ஹீரோ) : இந்த வருஷம் என் மனசுக்கு பிடிச்ச பெண்ணை தேடிப்பிடிச்சி கல்யாணம் பண்ணனும். வெற்றி பெற்ற டாப் நட்சத்திரங்களின் வரிசையில் என் பெயர் எப்பவும் இருக்கணும். இதுதான் என் லட்சியம்.
சந்தானம் (காமெடி நடிகர்) : நெருங்கிய நண்பர்களோடு மாதம் ஒருமுறையாச்சும் மருவத்தூர் போக ஆசைப்படுகிறேன். என் ரசிகர்களுக்கு விதவிதமான கேரக்டர்களில் நடித்து சந்தோஷத்தைக் கொடுக்கணும்.
அனுஷ்கா (ஹீரோயின்) : தெலுங்கில் நிறைய நடிச்சிட்டு இருக்கேன். இந்த வருஷம் தமிழ்ல கவனம் செலுத்தி நிறைய படங்கள் நடிக்க ஆசைப்படுகிறேன்.
யுவன் (இசையமைப்பாளர்) : இந்த வருஷத்துக்குள்ள ஒரு ஹாலிவுட் படத்துக்கு இசையமைக்கணும். எனக்கு இருக்கும் இசை ரசிகர்களை மேலும் பல மடங்கு சந்தோஷப்படுத்த என் இசையின் புதுப்புது முயற்சிகள், தேடல்கள் இந்த வருஷம் அதிகமாகவே இருக்கும்.
கிரிஷ் (டைரக்டர்) : இந்த வருஷம் வானம் படத்தை தொடர்ந்து, அடுத்து தமிழில் இன்னொரு படம் பண்ண ஆசைப்படுகிறேன்.
ஆண்டனி (எடிட்டர்) : புகை பிடிக்கிறத சுத்தமா நிறுத்தணும்ங்கிறதுதான் 2011ம் ஆண்டைய எனது லட்சியம்.
0 comments: on "சினிமாவின் நட்சத்திரங்கள் சிலரது புத்தாண்டு லட்சியங்கள்"
Post a Comment