நடிகர் கார்த்திக்கும், ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனிக்கும் வருகிற ஜூலை மாதம் 3-ந் தேதி கோவை கொடிசியா அரங்கில் திருமணம் நடக்கிறது. கார்த்தி-ரஞ்சனி திருமண நிச்சயதார்த்தம் ஈரோட்டில் உள்ள மணப்பெண் வீட்டில் சமீபத்தில் நடந்தது. தற்போது திருமண ஏற்பாடுகள் இருவர் வீட்டிலும் தடபுடலாக நடந்து வருகிறது. மணமகளுக்கான பட்டுப்புடவை, மணமகனுக்கான பட்டுவேட்டி, பட்டு சட்டை ஆகியவை ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளன.
மும்பையில் பிரபல டிசைனர் மூலம் ஆடைகள் தேர்வு செய்யப்படுகின்றன. அங்குள்ள கடைகளில் மணமகளுக்கு பொருத்தமாக ஆடைகளை கார்த்தியும், அவரது குடும்பத்தினரும் தேர்வு செய்கிறார்கள். கார்த்தி தனக்கு பொருத்தமான வரவேற்பு ஆடைகளை தேர்வு செய்கிறார்.
0 comments: on "திருமண ஆடைகளை மும்பையில் வாங்கும் கார்த்தி"
Post a Comment