Thursday, January 13, 2011

ப்ரியாமணியின் நட்பு!

திரையுலகில், ஒரு படத்தில் ஜோடி சேர்ந்து நடித்தாலே அந்த நாயகனையும், நாயகியையும் இணைத்து கிசு கிசு செய்திகள் கிளம்புவது வாடிக்கையான விஷயம்! அப்படியிருக்கும்போது தொடர்ந்து நான்கு படங்களில் நடித்தால் சொல்லவா வேண்டும்?

அப்படி தொடர்ந்து நான்கு தெலுங்கு படங்களில் இணைந்து நடித்து இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருபவர்கள் ஜெகபதிபாபு - ப்ரியாமணி ஜோடி. ஆரம்பத்தில் நடிகர் ப்ருத்திவிராஜுடன் இணைத்து பேசப்பட்டார் ப்ரியாமணி என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ப்ரியாமணி கொஞ்சம் கோபமாக பேசும்போது,

""நான் யாரையாவது காதலித்தாலோ, இல்லை எனக்கு திருமணம் என்றாலோ அதை நான் பகிரங்கமாகச் சொல்வேன். நான் எதற்காக பயப்பட வேண்டும்? உண்மையில் இப்போதைக்கு நான் யாரையும் காதலிக்கவும் இல்லை, திருமணம் செய்யவும் முடிவு செய்யவில்லை.

யாருடனாவது நெருங்கிய நட்பை வைத்துக்கொண்டால் அதையெல்லாம் காதல் என்று எழுதுவதற்கும், பேசுவதற்கும் நானா பொறுப்பு? இதெல்லாம் வேலையில்லாதவர்கள் செய்யும் வீண் வம்பு. உண்மையில் நான் யாரையாவது காதலித்தால் அதை வெளிப்படையாக சொல்வேன். அதை மறைக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை'' என்றார்!

(நட்பை கொச்சைப்படுத்தலாமா?)

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "ப்ரியாமணியின் நட்பு!"

Post a Comment