தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க தலைவர் ராம.மு.அண்ணாமலை, பொதுச்செயலாளர் ஆர். பன்னீர்செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் வேண்டுகோளினை ஏற்று தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நிரந்தர மற்றும் பகுதி நிரந்தர திரையரங்குகள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருகிற 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை அரசு விடுமுறையானதால் அதிகப்படியாக ஒரு காட்சி அதாவது ஐந்தாவது காட்சி நடத்திக் கொள்ளலாம்.
மேலும் தமிழக அரசின் அரசாணையின்படி வருகிற 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை அதிகப்படியாக ஒரு காட்சி அதாவது ஐந்தாவது காட்சி நடத்திக்கொள்ளலாம். அதுபோல் நடமாடும் திரையரங்குகளுக்கு வருகிற 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை மேட்னி காட்சிகள் நடத்திக்கொள்வதற்கும் மற்றும் வருகிற 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை காலை காட்சிகள் நடத்திக்கொள்வதற்கும் அரசாணை மூலம் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
மாவட்ட ஆட்சியர் மற்றும் கேளிக்கை வரி அதிகாரிகளுக்கு முன் கூட்டியே இதுபற்றிய தகவல் தெரிவித்து விட்டு அதிகப்படியாக ஒரு காட்சி அதாவது ஐந்தாவது காட்சி நடத்திக்கொள்ளலாம் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எனவே தமிழக அரசின் அரசாணைப்படி அதிகப்படியான காட்சிகள் அதாவது ஐந்தாவது காட்சிகள் நடத்தி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். 'இளைஞனுக்காக' முதியவர் காட்டும் காடாட்சமோ....?

0 comments: on "பொங்கலுக்கு கூடுதல் காட்சிகள்!"
Post a Comment