Tuesday, January 4, 2011

காரட் பொங்கல்

தேவையானப் பொருட்கள்

பச்சரிசி - ஒரு கப்
துவரம்பருப்பு - அரை கப்
பொடியாக அரிந்த தக்காளி - ஒரு கப்
கடுகு - ஒரு தேக்கரண்டி
பச்சைமிளகாய் - 2
மிளகாய் வற்றல் - 2
புதினா இலைகள் - கால் கப்
துருவிய இஞ்சி - ஒரு தேக்கரண்டி
காரட் துருவல் - 2 கப்
பச்சை பட்டாணி - அரை கப்
கெட்டியான தேங்காய்ப் பால் - ஒரு கப்
நெய் - 2 மேசைக்கரண்டி
மஞ்சள்தூள் - அரை தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு

செய்முறை

அரிசியையும் பருப்பையும் நன்கு கழுவி, தண்ணீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
வாணலியில் நெய்யை ஊற்றி அடுப்பில் வைத்து, அது சூடானதும் கடுகைச் சேர்க்கவும்.
கடுகு வெடித்ததும் மிளகாய் வற்றலை கிள்ளிப் போட்டு வறுத்து, அதன் பிறகு அரிந்த தக்காளியை சேர்த்து நன்கு குழைய வதக்கவும்.
பிறகு பச்சை மிளகாய், இஞ்சி, புதினாவை நன்கு அரைத்து, சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன் பின் காரட் துருவல், பட்டாணி, மஞ்சள் தூளைச் சேர்த்து வதக்கவும்.
ஊற வைத்துள்ள அரிசி, பருப்பினை நீரை வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துகொண்டு, அத்துடன் வதக்கின கலவையைச் சேர்த்து, தேவையான உப்பு, நீர், தேங்காய் பால் சேர்த்து கிளறி, குக்கரில் வைத்து வேக வைக்கவும்.
அரிசி நன்கு வேகும் வரை வைத்திருந்து (விரும்பினால் சற்றுக் குழைய விட்டு கொள்ளலாம்) பிறகு இறக்கி சூடாகப் பரிமாறவும்.

Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "காரட் பொங்கல்"

Post a Comment