தேவையான பொருட்கள்
* கலந்த காய்கறிகள் – 2 கப்
* தயிர் – 1 /4 கப்
* கருவேப்பிலை – ஒரு கொத்து
* தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
* பச்சை மிளகாய் – 2
* உப்பு – தேவையான அளவு
அரைக்க
* தேங்காய் துருவியது – 1 /4 கப்
* பச்சை மிளகாய் – 1 அல்லது 2
* சீரகம் – 3 /4 தேக்கரண்டி
* அரிசி மாவு – 1 /2 தேக்கரண்டி
தாளிக்க
* தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
* கருவேப்பிலை – ஒரு கொத்து
* கடுகு – 1 /2 தேக்கரண்டி (விருப்பமெனில்)
செய்முறை
1. முருங்கைக்காய், கொத்தவரங்காய், பட்டாணி, பீன்ஸ், வெள்ளை பூசணிக்காய், புடலங்காய், உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவற்றை உங்கள் விருப்பத்திற்கேற்ப காய்கறிகளை பயன்படுத்திக் கொள்ளலாம். காய்கள் அனைத்தையும் நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
2. முதலில் முருங்கைக்காய், கொத்தவரங்காய், பட்டாணி, பீன்ஸ் ஆகியவற்றை பச்சை மிளகாய், கருவேப்பிலை சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். முதலில் சேர்த்த காய்கறிகள் பாதி வெந்தவுடன் மீதமுள்ள காய்கறிகளைச் சேர்த்து வேக வேக வைத்துக் கொள்ளவும்.வாழைக்காயை கடைசியாகச் சேர்க்கவும்.
3. இல்லையெனில் குக்கரில் அனைத்து காய்கறிகளையும் சேர்த்து, சிறிது தண்ணீர் சேர்த்து 2 விசில்கள் வரை வேக விட்டு எடுக்கவும்.
4. காய்கறிகள் வெந்தவுடன், அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் பச்சை மிளகாய், தேங்காய், அரிசி மாவு ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும். பின் சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
5. அரைத்த விழுதை காய்கறிகளுடன் சேர்த்து, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும்.
6. கொதித்தவுடன் அடுப்பை அணைத்து, தயிர் சேர்த்து கலக்கவும். தாளிக்க கொடுத்துள்ளவற்றை தாளித்து அவியலில் கொட்டிக் கலக்கவும்.
7. சாதம் அல்லது அடையுடன் பரிமாறவும்.

0 comments: on "அவியல்"
Post a Comment