பிரபல இந்தி நடிகை பூமிகா, இவர் தமிழில் பத்ரி படம் மூலம் அறிமுகமானார். ரோஜாகூட்டம், ஜில்லுனு ஒரு காதல் சமீபத்தில் ரிலீசான சிறுத்தை போன்ற படங்களில் நடித்துள்ளார்.
தற்போது பிரபுதேவாவுடன் “களவாடிய பொழுதுகள்” படத்தில் நடித்து வருகிறார். பூமிகாவுக்கும் யோகா மாஸ்டர் பரத் தாகூருக்கும் 2007-ல் திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. விவாகரத்து செய்து பிரிய முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பூமிகாவும், பரத் தாகூரும் இணைந்து தயாரிப்பு கம்பெனி துவங்கி “தகிட தகிட” என்ற படத்தை எடுத்து வெளியிட்டனர்.
இப்படம் படுதோல்வி அடைந்தது. இதில் பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
பரத் தாகூர்தான் படம் தயாரிக்கும்படி பூமிகாவை நிர்ப்பந்தித்தாராம். துபாயில் இருவரும் யோகா ஸ்கூல் ஒன்றை துவங்கினர். இதற்காக பெரும் தொகை செலவிட்டார்களாம். ஆனால் எதிர்பார்த்த அளவு கூட்டம் வரவில்லை. இதிலும் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இருவருக்கும் பிரச்சினைகள் எழ இதுவே காரணம் என்று கூறப்படுகிறது. விருந்து நிகழ்ச்சிகளுக்கு பூமிகா தனியாகவே வருகிறார். வக்கீல்களுடனும் ஆலோசனை நடத்துகிறாராம். கோர்ட்டில் விரைவில் விவாகரத்து மனுவை தாக்கல் செய்வார் என்கின்றனர்.
0 comments: on "கணவருடன் மோதலால் விவாகரத்து கோரும் பூமிகா"
Post a Comment