சிம்புவுக்காகதான் நான் 'வானம்' படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று ஒருமுறை பேட்டியில் கூறியிருந்தார் அனுஷ்கா. அதுமட்டுமல்ல, இதற்காக சம்பளத்தை கூட குறைத்துக் கொண்டேன் என்று கூறியிருந்தார். இதை படித்த தயாரிப்பு தரப்பு கடும் கோபம் அடைந்தது. இதுவரை தமிழில் அனுஷ்கா நடித்த எந்த படத்திற்கும் வாங்காத சம்பளத்தை இந்த படத்திற்காக கொடுத்திருக்கிறோம். ஆனால் சம்பளத்தை குறைத்துக் கொண்டேன் என்று பொய் சொல்கிறாரே என்று ஆத்திரமுற்றார்களாம். ஆந்திராவில் வைத்தே அவருக்கு செலுத்தப்பட்ட ஒன்றேகால் கோடி சம்பள விபரத்தை நைசாக இன்கம்டாக்சுக்கு போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து வருமான வரித்துறையின் அதிகாரிகள் அனுஷ்காவிடம் விசாரிக்கிற அளவுக்கு போய்விட்டதாம் நிலைமை. ஏன் இப்டி ஒரு கொல வெறி.....?

0 comments: on "அனுஷ்காவை போட்டுக்கொடுத்த தயாரிப்பாளர்!"
Post a Comment