இஞ்சி துவையல
தேவையான பொருட்கள்:
இஞ்சி விரல் நீளதுண்டு - 1
சிறிய வெங்காயம் - 10
காய்ந்த மிளகாய் - 1
தனியா - 1 டீ ஸ்பூன்
சீரகம் - 1/2 டீ ஸ்பூன்
மிளகு - 5
கறிவேப்பிலை - சிறிது
தேங்காய் துருவல் - 1/2 கப்
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்.வெங்காயத்தை தோல் உரித்து வைக்கவும்.வாணலியை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய்விட்டு இஞ்சியை வதக்கி தனியாக வைக்கவும்.அதே வாணலியில் மீதி எண்ணெய் விட்டு வெங்காயத்தை போட்டு வதக்கவும். தனியா, மிளகாய், சீரகம், மிளகு, கறிவேப்பிலை போட்டுவதக்கிதேங்காயதுருவல்,புளி,உப்பு,வதக்கியஇஞ்சிசேர்த்துவதக்கிஆறவிடவும்.ஆறியவுடன் மிக்சியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். சுவையான இஞ்சி துவையல் ரெடி.
0 comments: on "இஞ்சி துவையல்"
Post a Comment