Monday, January 3, 2011

தூக்கம் முக்கியம்

எந்த அளவுக்கு நமக்கு உழைப்பு முக்கியமானதோ, அதே அளவுக்கு போதிய ஓய்வும் (தூக்கம்) முக்கியம். அப்போதுதான் நாம் தொடர்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் பணிசெய்ய இயலும்.

ஒருவர் போதிய தூக்கம் இன்றி தவித்தால், அவரால் மறுநாள் தனது பணியில் கவனம் செலுத்த முடியாது.

தூங்கும் நேரத்தின் அளவு குறைந்தாலும், ஆழ்ந்த தூக்கத்தின்போது, இடை இடையே தொந்தரவுகள் ஏற்பட்டு தூக்கம் கலைவதாலும் நினைவாற்றல் பாதிக்கப்படுகிறது.

ஒருநாள் தூக்கத்தை இழப்பவர்களுக்கு, மூளையில் உள்ள ஹிப்போகேம்பஸ் என்னும் பகுதி பாதிப்புக்குள்ளாவதாக அந்த ஆய்வு கூறுகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 60 வயதிலும் ஆரோக்கியமாக திகழும் 13 பேரிடம் ஆய்வு நடத்தினர். ஆழ்ந்த தூக்கம் மற்றும் லேசான பாதிப்புடன் கூடிய தூக்கம் போன்ற நிலைகளில் அவர்களிடம் பரிசோதனைகள் நடத்தப்பட்டது.

உடல் பருமன், மன அழுத்தம், அதிக வெளிச்சம், சுற்றுப்புற ஒலி போன்ற பல்வேறு காரணங்களால் நிம்மதியான தூக்கம் பாதிக்கப்படலாம்.

பல்வேறு நிலைகளில் தூக்கம் பாதிப்புக்குள்ளானவர்களின் நினைவாற்றல் குறித்து பரிசோதிக்கப்பட்டதில், தூக்கம் கலைந்தவர்களின் நினைவுத்திறன் வெகுவாக பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.

ஆனால், ஆழ்ந்த தூக்கம் கொண்டிருந்தவர்களின் நினைவாற்றல் நல்ல முறையில் இருந்தது.

எனவே, இரவில் அதிகநேரம் விழிந்திருந்து மறுநாள் சோம்பலாக இருப்பதை விட, போதிய நேரம் தூங்கி எழுந்தால், மறுநாள் மிகவும் சுறுசுறுப்பாக பணிபுரியலாம்.
Digg Google Bookmarks reddit Mixx StumbleUpon Technorati Yahoo! Buzz DesignFloat Delicious BlinkList Furl

0 comments: on "தூக்கம் முக்கியம்"

Post a Comment