இயக்குநர் செல்வராகவன், லண்டனில் படித்த ஒரு மாணவியை காதல் திருமணம் செய்துகொள்கிறார். இவர்கள் திருமணம் சென்னையில், ஜூன் மாதம் நடக்கிறது. இயக்குநர் கஸ்தூரிராஜாவின் மூத்த மகன், செல்வராகவன். 'துள்ளுவதோ இளமை' படத்தில், கஸ்தூரிராஜாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தார்.
தனுஷ்-சோனியா அகர்வால் நடித்த 'காதல் கொண்டேன்' படத்தின் மூலம் இயக்குநர் ஆனார். தொடர்ந்து 'புதுப்பேட்டை,' '7ஜி ரெயின்போ காலனி,' 'ஆடவால்லு மாட்டலகு அர்த்தாலே வேறுலே' (தெலுங்கு), 'ஆயிரத்தில் ஒருவன்' ஆகிய படங்களை இயக்கி, தமிழ்-தெலுங்கு பட உலகின் முன்னணி இயக்குநராக பிரபலம் ஆனார். இவரும், நடிகை சோனியா அகர்வாலும் நீண்டகால காதலர்களாக இருந்தார்கள். கடந்த 2006-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். அடுத்த இரண்டு வருடங்களில் இருவரும் பிரிந்து விட்டார்கள். பின்னர் இரண்டு பேரும் விவாகரத்து செய்து கொண்டார்கள். இந்த நிலையில், இயக்குநர் செல்வராகவனுக்கும், லண்டனில் படித்த ஒரு மாணவிக்கும் இடையே காதல் மலர்ந்து இருக்கிறது. அந்த மாணவியின் பெயர், கீதாஞ்சலி. லண்டனில், 'சினிமா படத் தயாரிப்பு' பற்றிய படிப்பில் பட்டம் பெற்றவர். செல்வராகவனும், கீதாஞ்சலியும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ளத் திட்டமிட்டு இருக்கிறார்கள். இவர்கள் திருமணம் சென்னையில், வருகிற ஜூன் மாதம் நடக்கிறது. முன்னதாக நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்த முடிவு செய்து இருக்கிறார்கள்.
கீதாஞ்சலியை திருமணம் செய்துகொள்வது பற்றி செல்வராகவன் கூறியது:- 'கீதாஞ்சலி என் வாழ்க்கையில் தேவதையாக வந்து இருக்கிறார். அவர், சினிமாவை சேர்ந்த பெண் அல்ல. ஒரு தனியார் நிறுவனத்தின் நிர்வாகி. கெட்ட நேரம் நடந்துக் கொண்டிருந்தபோது, என் வாழ்க்கையில் வசந்தமாக கீதாஞ்சலி வந்தார். கெட்ட நேரத்தில் இருந்து என்னை வெளியே இழுத்து வந்து விட்டார். என் வாழ்க்கையை அவர்தான் சீர்படுத்தினார். என்னை நல்லவனாக அவர்தான் மாற்றினார். உண்மையான காதலையும், அதன் மகத்துவத்தையும் இப்போதுதான் நான் உணர்ந்து இருக்கிறேன்.
நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து இருக்கிறோம். பெற்றோர்கள் சம்மதத்துடன் எங்கள் திருமணம் நடைபெறும்." இவ்வாறு செல்வராகவன் கூறினார். இனிமேலாவது குடும்பம், பொஞ்சாதின்னு ஒழுங்கா இருங்க....

0 comments: on "இயக்குநர் செல்வராகவன் காதல் திருமணம் செய்துகொள்கிறார்"
Post a Comment