* பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு - 200 கிராம்
* வெல்லம் - 100 கிராம்
* ஏலக்காய் - சிறிதளவு
* உப்பு - சிறிதளவு
* நல்லெண்ணெய் - சிறிதளவு
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உப்பு போட்டு நன்கு கொதித்த தண்ணீரை சிறிது சிறிதாக விட்டு கரண்டி காம்பால் கலந்து கொள்ளவும். 5 நிமிடம் மூடி தனியே வைக்கவும்.
தேவையான அளவு வெல்லம் எடுத்து தண்ணீர் விட்டு பாகு போல் காய்ச்சவும். அதனுடன் ஏலக்காய் பொடித்து சேர்க்கவும். பாகை வடிகட்டி வைக்கவும்.
கொதித்த நீரை விட்டவுடன் மாவே வெந்தது போல் இருக்கும். அதனுடன் சிறிது நல்லெண்ணெய் விட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். பிறகு மாவை அரை விரல் அளவு உருட்டிக்கொள்ளவும்.
கலந்து வைத்திருக்கும் மாவையும், பேப்பரை விரித்து அதன்மேல் பரவலாக உருட்டி போடவும்.
அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். உருட்டிய உருண்டைகளை கொதிக்கும் நீரில் போடவும். பிறகு அதன் மேல் வெல்லபாகையும் ஊற்றவும். உருண்டைகள் உடையாமல் கலந்து விடவும்.
வெந்த உருண்டைகள் மேலே மிதக்கும். வெல்லக் கரைசல் சிறிது கெட்டியானவுடன் அடுப்பை நிறுத்தவும்.
சுவையான பால் கொழுக்கட்டை தயார்.
பதப்படுத்தப்பட்ட அரிசி மாவு தயாரிக்கும் முறை:
பச்சரிசியை தண்ணீரில் 1 /4 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசியை வடித்து எடுத்து சுத்தமான வெள்ளை துணியில் நிழலில் உலர்த்தவும். அரிசியில் சிறிது ஈரம் இருக்கும் போதே மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். சல்லடையில் நன்றாக சலித்துக் கொள்ளவும். சலித்த மாவை ஒரு துணியில் மூட்டையாக கட்டி இட்லிக்கு வேக வைப்பது போல் வேக வைத்து எடுத்தால் அரிசி மாவு தயார். இந்த மாவை புட்டு, இடியாப்பம் செய்யவும், 6 மாதம் வரை உபயோகப்படுத்தலாம்

0 comments: on "பால் கொழுக்கட்டை"
Post a Comment