தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள 'ஆடுகளம்' பொங்கலுக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. இத்திரைப்படத்தில் தனுஷ் - 'கறுப்பு' என்னும் பாத்திரத்தில் நடிக்கிறாராம். மதுரை பிரதேசத்தின் கிராமத்து இளைஞனாக வலம்வரும் 'கறுப்பு' வித்தியாசமான இளைஞன் என நடிகர் தனுஷ் குறிப்பிட்டுள்ளார். வெற்றிமாறனின் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'ஆடுகளம்' திரைப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். சன்பிக்சர்ஸ் வெளியீடாக வரவிருக்கும் 'ஆடுகளத்தின்' ஆடியோ விழாவை தமக்கேயுரிய முறையில் பிரமாண்டமாக கொண்டாடியது சன் பிக்சர்ஸ். ஆனால் அவ்வளவு பெரிய நிறுவனமே ஒரு விஷயத்தில் திக்குமுக்காடி நிற்கிறதாம். இதுநாள் வரைக்கும் இப்படத்தின் வெளிநாட்டு விற்பனை உரிமையை யாருமே வாங்க முன் வரவில்லை. அதற்குக் காரணம், படத்தைப் பற்றிய தவறான எண்ணம் இல்லை. சீதோஷ்ண நிலையால் வந்த வினை. வெளிநாடுகள் பலவற்றில் உருக்கி வதைக்கிறதாம் பனி. இதன் காரணமாக பல தியேட்டர்களை மூடியே விட்டார்களாம். இந்த நேரத்தில் எப்எம்எஸ் வாங்கி எப்படி திரையிடுவது என்று இங்குள்ள விநியோகஸ்தர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். பொங்கல் நேரத்தில் வெளியாகும் மற்ற படங்களின் வெளிநாட்டு ரிலீஸ் கூட இந்த சங்கடத்தை சந்திக்கவிருக்கின்றன. ஆனால் அவையெல்லாம் வெளிநாட்டு உரிமையை முன்பே விற்றுவிட்டன என்பதுதான் ஆறுதலான செய்தி. யானைக்கும் அடி சறுக்கும்!

0 comments: on "ஆடுகளத்திற்கு ஒத்துழைக்காத இயற்கை!"
Post a Comment