Latest Posts

Saturday, May 26, 2012

சர்க்கரை நோயை வெற்றிகரமாக குணப்படுத்துவதற்கான முன்னோட்டம்

       பெரும்பான்மையான சர்க்கரை நோயாளிகள் Type-2 சர்க்கரை நோயால்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். Type-2 சர்க்கரை நோய் என்பது இன்சுலீன் பற்றாக்குறையால் வருவதில்லை. மாறாக சுரக்கின்ற இன்சுலீனை செயல்பட விடாமல் உடம்பிலுள்ள செல்கள் அதை எதிர்ப்பதனால் இந்த சர்க்கரை நோய் வருகிறது. நகரவாசிகள் பெரும்பாலும் இப்பொழுது அமர்ந்த இடத்திலேயே வேலை செய்வதால் உடம்பிற்கு தேவையான உடற்பயிற்சி கிடைக்காமல் போய்விடுகிறது. இது மட்டுமின்றி அளவுக் கதிகமாக செயற்கை முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பண்டங்கள் இப்பொழுது சுலபமாகக் கிடைக்கின்றது. ஒரு வரம்பின்றி நாள்தோறும் மக்கள் இத்தகைய உணவுப் பண்டங்களை உண்பதால் ரத்த ஓட்டத்தில் ஏராளமான கார்போஹைட்ரேட் என்ற மாவுச்சத்து சேர்ந்து விடுகிறது. இதை ஜீரணிப்பதற்காக நம்முடைய உடம்பும் ஏராளமான இன்சுலீனை சுரந்து கொண்டிருக்கிறது. இன்சுலீன் குறைந்தால் செல்கள் பாதிக்கப் படுவது எவ்வளவு உண்மையோ அதே அளவிற்கு இன்சுலீன் அதிகமானாலும் செல்கள் பாதிக்கப்படுவதும் உண்மை. ஆகவே இன்சுலீன் அளவு அதிகரிக்கும் பொழுது அதை உள்ளே விடாமல் செல்கள் தடுக்கின்றன. இப்படி குறைவான உடற்பயிற்சி மற்றும் தவறான உணவு பழக்கங்கள் மற்றும் செல்களைப் பாதிக்க கூடிய அளவிற்கு இன்சுலீன் சுரந்து போதல் அதற்கு உடம்பில் வருகின்ற எதிர்ப்பு என்று இவையெல்லாம் சேர்ந்து Type-2 சர்க்கரை நோயை கொண்டு வந்துவிடுகிறது. இம்மாதிரியான சர்க்கரை நோய் நகரவாசிகளிடையே வேகமாக பரவியும் வருகிறது  
.
         இத்தகைய பாதிப்புக்கு ஆளானவர்கள் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த இப்பொழுது சுலபமாகக் கிடைக்கின்ற மாத்திரைகளை உட்கொள்கின்றனர். மருந்தின் விளைவாக சர்க்கரை லெவல் குறையும் பொழுதோ நார்மலுக்கு வரும் பொழுதோ இப்படியே ஆயுள் பூராவும் சர்க்கரையை கட்டுப்படுத்திக் கொள்ளலாம். இனிமேல் உடல் நலத்தை பற்றிக் கவலைப்படத் தேவையில்லை என்று நோயாளிகள் எண்ணுகிறார்கள். ஆனால் இப்படி நம்புவது தவறான நம்பிக்கையாகும். மருந்து, மாத்திரைகள் நோயின் சின்னங்களையும், அறிகுறிகளையும்தான் கட்டுப்படுத்துகின்றன. ஆனால் உண்மையில் அடிப்படைக் காரணங்களான உடற்பயிற்சியின்மை மற்றும் தவறான உணவுப் பழக்கங்கள் ஆகியவை தொடரும் வகையிலும் நோயின் பாதிப்பு தொடரத்தான் செய்யும். இந்த அடிப்படைக் குறைபாடுகளை தீர்க்காத பட்சத்தில் நோயாளி மேலும் மேலும் அதிகமாக மாத்திரைகளைச் சாப்பிட்டால்தான் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம் என்ற நிலை வரும். இரத்த ஓட்டம், அடர்த்தியாகி வேகமும் குறைந்து விடுகிறது. இதன் காரணமாக இதயம், ஈரல், சிறுநீரகம், கண்கள் போன்ற முக்கிய உறுப்புகளுக்கு போதிய ரத்த ஓட்டம் கிடைக்காமல் அவைகளுடைய செயல்பாடு பாதிக்கப்படுகிறது. சர்க்கரை நோய் நீண்டகாலம் இருக்கும் பொழுது நோயாளியின் ஆயுட்காலம் 13.5 ஆண்டுகளுக்கு குறைவதாக வல்லுநர்கள் சொல்கிறார்கள்.

        Dewayne Mcculley என்ற அமெரிக்க என்ஜீனியர் ஒருவருக்கு திடீரென்று Type-2 சர்க்கரை நோய் உருவாகி அவருடைய சர்க்கரை லெவல் கிடுகிடுவென 1300 mg/dl புள்ளிகளுக்கு உயர்ந்து விட்டது. அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை செய்ய ஆரம்பித்தனர். ஆனால் அவர் பிழைப்பாரென்று யாருமே எதிர்ப் பார்க்கவில்லை. இருந்தாலும் உடனடியாக சிகிச்சை ஆரம்பித்ததன் பலனாக அவருடைய உயிரைக் காப்பாற்ற முடிந்தது. தன் உடம்புக்கு திடீரென்று இந்தப் பாதிப்பு எப்படி வந்தது? இதிலிருந்து எப்படி விடுபடுவது என்று அவர் யோசிக்க ஆரம்பித்தார். சர்க்கரை வியாதியைப் பற்றி கிடைத்த தகவல்களையெல்லாம் படித்து அந்த வியாதியைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டார். ஆயுள் முழுவதும் மருந்து மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும் என்ற நிலை அவருக்குப் பிடிக்கவில்லை. தனக்கு வந்துள்ள இந்தக் குறைபாடு தவறான உணவுப் பழக்கங்களாலும், போதிய உடற்பயிற்சியின்மையாலும்தான் வந்திருக்கிறது என்று நம்பினார். ஆகவே தன் உணவுப் பழக்கங்களை மாற்ற ஆரம்பித்து தான் சாப்பிடும் கார்போஹைட்ரேட் அளவை பெரும் அளவு குறைத்தார். மாவுச்சத்து மிக்க நன்கு பதப்படுத்தப்பட்ட செயற்கையாக சுவையூட்டப்பட்ட உணவுப் பண்டங்களை சாப்பிடுவதைக் குறைத்தார். இதற்குப் பதிலாக super-meal என்ற ஒரு புது உணவுத் திட்டத்தைத் தயாரித்தார். இந்த உணவுத் திட்டத்தில் 50% கார்போஹைட்ரேட் 25% புரோட்டீன், 25% கொழுப்புச்சத்து கிடைக்குமளவிற்கு உணவுப் பண்டங்களைச் சேர்த்தார். இவற்றோடு கூட கால்சீயம் மற்றும் விட்டமின்கள் ஆகிய கூடுதல் சத்துப் பொருள்களையும் சேர்த்தார். இந்த super-meal திட்டத்தில் நிறைய காய்கறிகள் மற்றும் கீரை வகைகளையும் சேர்த்துக் கொண்டுள்ளார். பப்பாளி, பம்பளிமாஸ், என்ற பழவகை களையும், முட்டைகோஸ் ஆகியவற்றை சேர்க்கிறார்.

       அரிசியானாலும், கோதுமையானாலும், பழுப்பு நிற அரிசியினால் செய்யப்பட்ட சாதம் மற்றும் பழுப்பு நிற கோதுமையால் செய்யப்பட்ட ரொட்டியைத்தான் சாப்பிடச் சொல்கிறார். இந்த முறையான உணவுத் திட்டம் மற்றும் போதிய உடற்பயிற்சி ஆகிய இரண்டின் காரணமாக நாலே மாதங்களில் தனக்கு வந்த சர்க்கரை நோயிலிருந்து விடுபட்டார். இப்பொழுது மருந்து மாத்திரைகளின் உதவியில்லாமலேயே வெறும் உணவு கட்டுப்பாட்டின் மூலமாகவே சர்க்கரை நோயின்றி ஆரோக்கியமாக இருக்கின்றார்.
 
      அவர் தயாரித்த super meal அமெரிக்கர்களுக்காக தயார் செய்யப்பட்டது என்றாலும் நம் நாட்டில் கிடைக்கின்ற உணவுப் பொருட்களை வைத்துக் கொண்டு நமக்கேற்ற மாதிரி உணவு தயார் செய்து கொள்ளலாம். ஒரு பக்கம் அவர் காய்கறிகள் நிறைய சாப்பிட வேண்டுமென்று வலியுறுத்துகிறார் என்றாலும் அதே சமயத்தில் இன்னொரு பக்கம் மணிலா எண்ணெய், நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் போன்ற எண்ணெய்களுக்குப் பதிலாக தேங்காய் எண்ணெய்யை வறுவலுக்கு பயன் படுத்தச் சொல்கிறார். அவர் தவிர்க்க வேண்டுமென்று சொல்வதில் சர்க்கரை சத்து மிகுந்த பழங்களான வாழைப்பழம், திராட்சை, அன்னாசி போன்றவைகளும், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவைகளும் அடங்கும். நம்முடைய அன்றாட உணவில் 25%ஆவது கறி, மீன் வகைகள் இருக்கலாம் என்று அவர் சொல்கிறார் என்றாலும் சைவ சாப்பாடு சாப்பிடும் பல இந்தியர்களுக்குப் பொருந்தாது. ஆகவே அவர்கள் புரதச்சத்து பெறுவதற்காக நிறைய தயிர் மற்றும் சோயா, முந்திரி, மணிலா கொட்டைகளைச் சாப்பிடலாம்
.
      உடற்ப்பயிற்சியை மிக முக்கியமாக‌ ஆக எடுத்துக் கொண்டிருக்கிறார். அவர் கருத்துப்படி தினசரி காலையிலும், மாலையிலும் ஒரு மணி நேரமாவது வேகமாக நடக்க வேண்டும் என்கிறார். எடை கூடுதலாக இருப்பது மற்றும் தொப்பை போட்டிருப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும் என்கிறார். கூடுதல் எடைக்கும் உடம்பின் உடைய இன்சுலீன் எதிர்ப்பிற்கும் சம்மந்தம் இருக்கிறது என்கிறார். அவருடைய ஆராய்ச்சியில் கூடுதல் எடையை குறைத்தவர்களுக்கு சர்க்கரை அளவும் நன்றாக குறைந்துள்ளதாகச் சொல்கிறார்.

      Dewayne Mcculley தான் சாதித்ததை மற்ற சர்க்கரை நோயாளிகளும் சாதிக்கலாம் என்று திட்டவட்டமாகச் சொல்கிறார். அந்த நம்பிக்கையில்தான், தன்னுடைய அனுபவங்களையும், தன்னுடைய super meal திட்டங்களையும், தான் இந்த சர்க்கரை நோயி லிருந்து மீண்ட விவரங்களையும், தான் எழுதியுள்ள Death to Diabetes என்ற புத்தகத்தின் மூலம் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார். அவருடைய ஆலோசனைகளையும், வழி காட்டல்களையும் பின்பற்றுபவர்கள் எவரும் சர்க்கரை வியாதியிலிருந்து விடுபட்டு நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வார்கள் என்பது உறுதி.
read more...

Saturday, October 8, 2011

Tamil Send Free Diwali SMS Greetings * Deepavali SMS *

Aalaalukku
Ippadi Peasaama
Irundha Eppadi...???
Innum Konjam
Naall dhaan Irukku!!!
Yaaraavadhu
Advance Wishes
Aarambingappa...
Naaney
Arambikkirean
***ADVANCE HAPPY DEEPAVALI***
(Thanks to Somebody from India)





Deepangal Jolikka,
Pattasu vedikka,
Pudhu Thuni Udhuthi,
Magilchiyudan in'naalai neengal kondada,
En Iniya Deepavali Vaazthukkall...
anphudan shiva.......
(Thanks to Shivakumar from India)





உனக்கும் உன் குடும்பத்தார்க்கும் என் இனிய ***தீபாவளி*** நல்வாழ்த்துக்கள், என்றும் அன்புடன் உன் நண்பண்.



இனிய தீபாவளி வாழ்துக்கள் 
read more...

Send Free Diwali SMS Greetings * Deepavali SMS *Hindi

Diwali aai, masti chahi, rangi rangoli, deep jalaye, Dhoom Dhadaka, chhoda phataka, jali Phuljadiyan, Sabko Bhaye, "Happy Diwali !"



Asha, Utsah aur Ullas ki Abha se Damakti
Amavas ko Poonam me Badalti,
Deepon ki Muskurahat aur Athkheliyon ka]
Yah Parv Apke-Apke Apno ke,
Jeevan me Hamesha Jagmagati Rahe,
Bankar SHUBH DEEPAWALI.
(Thanks to "Friend" from India)





LAMMI KA HATH HO, SARASWATI KA SATH HO, GANESHKA NIVAS HO,
AUR MA DURGA KA AASHIRWAAD SE APKE JIVAN ME KUSHIYA HO.
"HAPPY DIWALI"
(Thanks to Ratnesh Ronald Sahai from Fiji)





Aai aai Diwali aai, Saath me kitni Khushiya laayi, Dhoom machao, mauz manao, aap sabhi ko Diwali ki badhai. Happy Diwali !   
read more...

Send Free Diwali SMS Greetings * Deepavali SMS *

                             English

With Gleam of Diyas,
And the Echo of the Chants,
May Happiness and Contentment Fill Your life !
Wishing you a very happy and prosperous Diwali !!!



I Pray to God to give U Shanti, Shakti, Sampati, Swarup, Saiyam, Saadgi, Safalta, Samridhi, Sanskar, Swaasth, Sanmaan, Saraswati, aur SNEH. SHUBH DIWALI.
(Thanks to Parvinder Kumar from India)





Troubles as light as Air, Love as deep as the Ocean,
Friends as Solid as Diamonds, Success as bright as Gold...
These are the wishes for you and your family on the eve of Diwali.
Diwali ki Shubhkamana!





MAKE YOUR LIFE JOYFUL
NEVER LOSE HOPE
ALWAYS BE HAPPY WITH YOUR FAMILY
MAKE YOUR ENEMY ALSO A GOOD FRIEND
GET A BLESS FROM GOD AND ELDER
******* HAPPY + DIPAWALI *******
FOR ALL THE HINDU FAMILIES
(Thanks to Kanchan Sagar from USA)

 
read more...

Monday, June 6, 2011

ஹெல்தியான ப்ரூட் சாலட்

சாலட்    வகைகளில் காய்கறி சாலட், ப்ரூட் சாலட் போன்றவற்றில் தினமும் ஏதாவது ஒன்றை உண்பது மிகவும் நன்று. இது உடலில் கொலஸ்ட்ராலை குறைத்து, சுறுசுறுப்பாக இருக்கச் செய்யும். பச்சையாக உண்பதால் அனைத்துவித மினரல்களும் கிடைக்கும்.

ப்ரூட் சாலட் செய்ய தேவையான பொருட்கள்




வாழை பழம்--1
கறுப்பு திராட்சை---1கப்
 ஆரஞ்சு பழம்--1
பப்பாளி பழ துண்டுகள்--1கப்
மாதுளை முத்துக்கள்---1கப்
தேன் 3 ஸ்பூன்
சாட் மசாலா தூள்--- 2ஸ்பூன்
சிறிதளவு எலுமிச்சை சாறு

பெரிய வாயகன்ற கிண்ணத்தில் எல்லா பழங்களையும் ஒன்றாக கலந்து அதோடு தேன், சாட் மசாலா சேர்த்து கிளறி விடவும். பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக சாப்பிடவும். கூல் செய்ய வேண்டாம் என்றால் அப்படியே கலந்த உடனேயே சாப்பிடலாம்.




read more...

முந்திரி பக்கோடா

தேவையானவை;முந்திரி-1\4கிலோ,கடலைமாவு-100கிராம்,புதினா-1கைப்பிடி,(இஞ்சி,பச்சைமிளகாய்,சோம்பு)அரைத்த பேஸ்ட்-2டீஸ்பூன்,அரிசிமாவு-3டீஸ்பூன்,ஆயில்-தேவைக்கு,உப்பு

செய்முறை;ஆயில் தவிரமற்றவற்றை சிறிது தண்ணீர்விட்டு கெட்டுயாகபிசைந்து ஆயிலில் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.
read more...

சாக்கலேட் பர்பி


தேவையானப்பொருட்கள்:

மைதா - 1 கப்
சர்க்கரை - 2 கப்
கோக்கோ பவுடர் அல்லது சாக்கலேட் பவுடர்- 1 டேபிள்ஸ்பூன்
பால் பவுடர் - 1/2 கப்
நெய் - 4 அல்லது 5 டேபிள்ஸ்பூன்
பால் - 1/2 கப்

செய்முறை:

நெய்யை வாணலியில் போட்டு, உருகியதும் அதில் மைதாவை வாசனை வரும் வரை (2 அல்லது 3 நிமிடங்கள்) வறுத்து எடுத்து, அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, அதில் பால் பவுடரைச் சேர்த்துக் கிளறி வைத்துக் கொள்ளவும்.

சர்க்கரையுடன் 1/2 கப் தண்ணீரைச் சேர்த்து கொதிக்க விட்டு நல்ல பதம் வந்ததும் (தண்ணீரில் சிறிது பாகை விட்டால், அது கரையாமல் அப்படியே இருக்க வேண்டும். விரல்களால் எடுத்தால் மிருதுவாக முத்து போல் வர வேண்டும், அத்துடன் வறுத்து வைத்துள்ள மைதாவைச் சேர்த்துக் கிளறவும். பின்னர் அதில், வெதுவெதுப்பான பாலில் கோகோவைக் கலந்து ஊற்றி, மீண்டும் நன்றாகக் கிளறவும். வாணலியில் ஒட்டாமல் சுருண்டு வரும் பொழுது, இறக்கி நெய் தடவிய தட்டில் கொட்டி சமப்படுத்தவும். சற்று ஆறிய பின் துண்டுகள் போடவும்.


கோகோவிற்கு பதில், போர்ன்விடா அல்லது ட்ரிங்கிங் சாக்கலேட் சேர்த்தும் செய்யலாம். எது சேர்த்தாலும் வெதுவெதுப்பான பாலிலோ அல்லது தண்ணீரிலோ சேர்த்து நன்றாகக் கலந்து, அதன் பின் மாவில் சேர்க்கவும். அப்பொழுதுதான் கட்டியில்லாமல், சுலபமாக மாவுடன் சேரும். கிளறவும் எளிதாக இருக்கும்.

சர்க்கரை அளவு - 1 கப் மைதாவிற்கு, 2 கப்
போர்ன்விடா அளவு - 1 கப் மைதாவிற்கு 1/2 கப்
கோகோ என்றால் - 1 டேபிள்ஸ்பூன் போதும் - அதிகம் சேர்த்தால் சிறு கசப்பிருக்கும்.

பால் பவுடருக்குப் பதில் கன்டென்ஸ்டு மில்க் சேர்த்தும் செய்யலாம். பால் பவுடர் அல்லது கன்டென்ஸ்டு மில்க் சேர்த்து செய்தால் சுவை சற்று கூடுதலாக இருக்கும். இவற்றை சேர்க்காமலும் செய்யலாம்.

இரண்டு கலர் பர்பிக்கு, கோகோ சேர்க்காமல், மைதா பர்பி செய்து, விருப்பமாக எஸ்ஸெனஸ் சிறிது சேர்த்துக் கிளறி, ஒரு தட்டில் கொட்டி சமமாக பரப்பி ஆற விடவும்.
பின்னர், மேற்கூறியபடி சாக்கலேட் பர்பி செய்து, ஆற வைத்துள்ள மைதா பர்பியின் மேல் ஊற்றி சமமாகப் பரப்பி, சற்று ஆறிய பின் துண்டுகள் போட்டால், இரண்டு கலரில் இருக்கும்.
read more...